நிகழ்ச்சிக்கு அதிமுக மாவட்ட கழக அவை தலைவர் தொ.மு.நாகராசன், தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால், மாவட்ட கவுன்சிலர் கவிதா சரவணன் மாரண்டஅள்ளி நகர செயலாளர் கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் உயர்கல்வித்துறை மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் அவர்கள், கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி சமுதாயக்கூடம் மற்றும் உணவு அருந்தும்கூடத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் எம்ஜிஆர் மன்ற செயலாளர் புதூர் சுப்பிரமணி, மாவட்ட பிரதிநிதி ராஜா தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய தலைவர் ராஜா ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா ராமசாமி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணிவண்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் சென்னப்பன், கிளைக் கழக செயலாளர்கள் ஊர் பொதுமக்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக