பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய ஆங்கிலத்துறையில் இரண்டு நாள் மென்திறன் மேம்பாடு பயிலரங்கம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 அக்டோபர், 2024

பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய ஆங்கிலத்துறையில் இரண்டு நாள் மென்திறன் மேம்பாடு பயிலரங்கம் நடைபெற்றது.


தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியில்  செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கிலத் துறையின் என்லிட்டரசியா இலக்கிய மன்றத்தின் சார்பாகவும் எல்டாய் தர்மபுரி அமைப்பு சார்பாகவும் இரண்டு நாள் மென்திறன் மேம்பாட்டு பயிலரங்கம் 'வேலை வாய்ப்பினை மேம்படுத்திக் கொள்ளுங்கள்' என்ற தலைப்பில் நடைபெற்றது. 


இதில் பெங்களூருவைச் சார்ந்த மென்திறன் மேம்பாடு பயிற்றுனர் திருமதி. லாவண்யா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு வாழ்வியல் திறன்களான கருத்து பரிமாற்றம்,  பொது இடத்தில் பேசுதல்,  மன அழுத்தம் மற்றும் கவலையை கட்டுப்படுத்தும் செயல்முறைகள், மிக முக்கியமாக நேர மேலாண்மை மற்றும் நேர்காணலில் செயல்பட வேண்டிய விதம் குறித்தும் தெளிவாக எடுத்துரைத்தார். 


இன்றைய கால சூழலில் இளம் தலைமுறையினர் எவ்வாறு நேர மேலாண்மையில் தவறு செய்கின்றனர்,  சமூக ஊடகங்களில் நேர விரையம் செய்கின்றனர் என்பதை பற்றியும் அதே சமயத்தில் அச்சமுகஊடகங்களின் வாயிலாக சரியான வகையில் நேரத்தை பயன்படுத்தி அதில் இருக்கக்கூடிய வாழ்வியல் மேம்பாட்டிற்கான தகவல்களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை பற்றியும் வெகு  சிறப்பாக எடுத்துரைத்தார். 


மேலும் பொது இடத்தில் பேசுதல் மன அழுத்தம் மற்றும் கவலைகளை போக்குவது குறித்து பல்வேறு விளையாட்டுகள் மூலமாக மாணாக்கரிடையே எளிதில் புரியும் வண்ணம் எடுத்துரைத்தார். முன்னதாக ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொ) முனைவர் மோகனசுந்தரம் தலைமை ஆற்றினார்.  ஆங்கிலத்துறை தலைவர் பேரா. முனைவர் கோவிந்தராஜ் திருக்குறளில் கூறப்பட்டுள்ள வாழ்வியல் திறன் மேம்பாடுகளை எடுத்துக் கூறி இந்நிகழ்வுக்கான  துவக்க உரையாற்றினார். 


மேலும் இப்பயிலரங்க அமைப்பாளரும் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியருமான முனைவர் கிருத்திகா நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து இப்பயிலரங்கில் பங்கேற்ற அனைத்து மாணாக்கர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இறுதியாக கௌரவ விரிவுரையாளர் முனைவர் சரண்யா நன்றி உரையாற்றினார். 


இந்நிகழ்வை இரண்டாம் ஆண்டு மாணவி செல்வி நேகா தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஆராய்ச்சி மாணாக்கர்கள் மற்றும் மாணவிகள் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad