பாலக்கோடு பேருந்து நிலையத்தில் செளமியா அன்புமணி பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 அக்டோபர், 2024

பாலக்கோடு பேருந்து நிலையத்தில் செளமியா அன்புமணி பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மருத்துவர் செளமியா அன்புமணி பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்தும், தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியுடன்  வரவேற்பு அளித்தனர். முன்னதாக பாலக்கோடு தொகுதிக்குட்பட்ட கடமடை, வாழைத்தோட்டம், 5 வது மைல்கல், கரகூர், சென்னப்பன் கொட்டாய், சீங்காடு, சர்க்கரை ஆலை, பேளாரஅள்ளி, ஜோதிஅள்ளி ஆகிய கிராமங்களில் பொதுமக்களுக்கு  நன்றி தெரிவித்தவர்.


இறுதியாக பாலக்கோடு பேருந்து நிலையத்தில் நன்றி தெரிவித்து பேசும் போது தர்மபுரி மாவட்ட மக்களின் நலனுக்காகவும், விவசாயிகளின் வாழ்வதாரத்தை உயர்த்தும் வகையில் ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த பாடுபடுவேன் என்றும், தர்மபுரி மாவட்டத்தில் படித்து விட்டு வேலையில்லாமல் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர சிப்காட் அமைக்க பாடுபடுவேன் என்றும் தெரிவித்தார்.


அதுசமயம்  தர்மபுரி எம்.எல்.ஏ வெங்கடேஷ்வரன், பாமக மாநில துணைத்தலைவர் பாடி செல்வம், நகர செயலாளர் ராஜசேகர் நிர்வாகி உள்ளிட்ட பாமக நிர்வாகிகள், கிருஷ்ணன்,  ராஜவேல், ராஜா, துரை, உள்ளிட்ட தொண்டர்கள் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad