மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு ஆகியோரின் பிறந்தநாள் விழா பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 அக்டோபர், 2024

மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு ஆகியோரின் பிறந்தநாள் விழா பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி


மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு ஆகியோரின் பிறந்தநாள் விழா பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கையின் அறிவிப்பிற்கிணங்க தருமபுரி மாவட்டத்தில் மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு ஆகியோரின் பிறந்தநாளையொட்டி பேச்சுப்போட்டிகள் முறையே 15.10.2024, 16.10.2024 ஆகிய நாள்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அதியமான் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் முற்பகல் 09.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.

மகாத்மா காந்தி பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் 

பள்ளி மாணவர்களுக்கான தலைப்பு- 

  • காந்தி கண்ட இந்தியா. 
  • எம்மதமும் நம்மதம், 
  • இமயம் முதல் குமரி வரை, 
  • தென்னாப்பிக்காவில் காந்தியடிகள், காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு. 


கல்லூரி மாணவர்களுக்கான தலைப்பு- 

  • வேற்றுமையில் ஒற்றுமை, 
  • சத்திய சோதனை, 
  • மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், 
  • வட்டமேசை மாநாட்டில் காந்தியடிகள், 
  • உப்புசத்தியாகிரகத்தில் காந்தியடிகளின் பங்கு, 


ஜவகர்லால் நேரு பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் 

பள்ளி மாணவர்களுக்கான தலைப்பு- 

  • சுதந்திரப் போராட்டத்தில் நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர், 
  • மனிதருள் மாணிக்கம், 
  • ரோசாவின் ராசா, 
  • குழந்தைகள் தினவிழா, 


கல்லூரி மாணவர்களுக்கான தலைப்பு- 

  • ஆசிய ஜோதி, நேருவின் வெளியுறவுக் கொள்கை. 
  • நேருவின் பஞ்சசீல கொள்கை,
  • நேரு கட்டமைத்த இந்தியா, 
  • அமைதிப்புறா நேரு.


பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5000/-, இரண்டாம் பரிசாக ரூ.3000/-, மூன்றாம் பரிசாக ரூ.2000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெறும். மேலும் அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்புப் பரிசாக தொகை ரூ.2000/- வீதம் வழங்கப்பெறவுள்ளது.


தருமபுரி மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாக அனுப்பியுள்ள படிவத்தில் அந்தந்த கல்லூரி முதல்வரிடமும், பள்ளி மாணவ, மாணவிகள் முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக அனுப்பியுள்ள படிவத்தில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடமும் அனுமதி பெற்று பேச்சுப் போட்டியில் பங்கேற்கலாம். எனவே தருமபுரி மாவட்டத்தில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவிகள் இப்போட்டிகளில் பங்கேற்று பயன்பெறலாம், என தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad