பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஒரு நாள் கறுப்புப் பட்டை அணிந்து பணியாற்றும் போராட்டம்!. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 21 அக்டோபர், 2024

பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஒரு நாள் கறுப்புப் பட்டை அணிந்து பணியாற்றும் போராட்டம்!.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கடத்தூரில் கடந்த 18-10-2024 அன்று அதிமுக செயல்வீரர் கூட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற தினகரன் நிருபர் உதயகுமார் மற்றும் வெளிச்சம் தொலைக்காட்சி நிருபர் சீனிவாசன் ஆகியோரைத் தாக்கி செய்தி சேகரிக்க விடாமல் தடுத்து அவரது செல்போன், கேமராவைப்பிடுங்கி அதில் பதிவாகியிருந்த காணொளி பதிவுகளை அழித்த தைக் கண்டித்தும் தாக்குதலில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகளை கைது செய்யக் கோரியும் இன்று 21-10-2024 ஒரு நாள் முழுவதும் கறுப்புப் பட்டை அணிந்து பணியாற்றுவது என்று தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் பி.எஸ்.டி.புருஷோத்தமன் சார்பில் அனைத்து பத்திரிக்கையாளர்களையும் கேட்டுக்கொள்ளப்பட்டது.


அதனடிப்படையில் தினகரன் நாளிதழ் செய்தியாளர் உதயகுமார், வொளிச்சம் தொலைக்காட்சி செய்தியாளர் சீனிவாசன் ஆகியோரைத் தாக்கியவர்களைக் கண்டித்தும் அவர்களை கைது செய்யக் கோரியும் தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் சங்கம் சார்பில் கறுப்புப் பட்டை அணிந்து பணியாற்றும் போராட்டம் நடைபெற்றது, இதில் செய்தியாளர்கள் தமிழ்செல்வன், விசுவநாதன், வினோத்குமார், முத்தமிழ், லெனின், தங்கம், கோவிந்தசாமி, நந்தகுமார் மற்றும் சங்க  நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad