தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி அருகேயுள்ள கீழ் கொள்ளுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் கட்டிட மேஸ்திரி இவர் பெங்களூரில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகிறார். இவருக்கு கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. ஆயுத பூஜைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் கடன் தொல்லையால் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று மணமுடைந்த இவர் பூச்சி மருந்து குடித்து தட்டாரப்பட்டி சுடுகாடு அருகே தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்னர் அந்த வழியாக வந்தவர்கள் மாரியப்பன் இறந்த கிடந்ததை பார்த்ததும் பாப்பாரப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் வழக்கு பதிவு செய்து கடன் தொல்லையால் தான் இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக