இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது: வருகின்ற 03.12.2024 அன்று நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள்/ நிறுவனங்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களால் கீழ் கண்டுள்ளவாறு தமிழ்நாடு அரசின் மாநில விருதுகள் வழங்கப்படவுள்ளது.
வ. எண் |
விருதுகள் விவரம் |
விருதுகள் எண்ணிக்கை |
விருதுகள் விவரம் |
1 |
சிறந்த பணியாளர்/ சுயதொழில் புரிபவர் (அனைத்து வகை
மாற்றுத்திறனாளிகள்) |
10 விருதுகள் |
10 கிராம் எடையுள்ள
தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ் |
2 |
ஹெலன் கெல்லர்
விருது |
2 விருதுகள் |
10 கிராம் எடையுள்ள
தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ் |
3 |
சிறந்த ஆசிரியர்
(அறிவுசார் குறையுடையோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்) |
1 விருதுகள் |
10 கிராம் எடையுள்ள
தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ் |
4 |
சிறந்த சமூக
பணியாளர் |
1 விருதுகள் |
10 கிராம் எடையுள்ள
தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ் |
5 |
மாற்றுத்திறனாளிகளிகளுக்கு
சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம் |
1 விருதுகள் |
10 கிராம் எடையுள்ள
தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ் |
6 |
மாற்றுத்திறனாளிகளிகளை
அதிக அளவில் பணியமர்த்திய சிறந்த தொண்டு நிறுவனம் |
1 விருதுகள் |
10 கிராம் எடையுள்ள
தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ் |
7 |
ஹெலன் கெல்லர்
விருது (ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிலும் செவித்திறன் குறையுடையோருக்கு
கற்பிக்கும் சிறந்த ஆசிரியர் |
1 விருதுகள் |
10 கிராம் எடையுள்ள
தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ் |
8 |
மாற்றுத்திறனாளிகளுக்கு
சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துநர் |
2 விருதுகள் |
10 கிராம் எடையுள்ள
தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ் |
9 |
பொதுக்கூட்டங்களில்
மாற்றுத்திறனாளிகளுக்கான தடையற்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசு மற்றும்
தனியார் நிறுவனங்கள் |
2 விருதுகள் |
10 கிராம் எடையுள்ள
தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ் |
எனவே தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள்/ நிறுவனங்கள் மேற்காணும் விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் விருதாளர்கள் https://awards.tn.gov.in என்ற வளைத்தளத்தில் 28.10.2024 அன்று பிற்பகல் 05.00 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வலைத்தளத்தில் விண்ணபிக்காத விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் விண்ணப்பத்தின் இரண்டு நகல்களை 28.10.2024 அன்று பிற்பகல் 05.00 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக