“பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கிவைத்த மாவட்ட ஆட்சியர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 அக்டோபர், 2024

“பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கிவைத்த மாவட்ட ஆட்சியர்.


தருமபுரி மாவட்டம், அவ்வையார் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பாக சர்வதேச பெண் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற உறுதிமொழியினை ஏற்று, விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் இன்று (10.10.2024) துவக்கி வைத்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

தருமபுரி மாவட்டம், அவ்வையார் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பாக சர்வதேச பெண் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற உறுதிமொழியினை ஏற்று, விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் இன்று (10.10.2024) துவக்கி வைத்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.


மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:- தருமபுரி மாவட்டத்தில் “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற திட்டத்தின் கீழ் பள்ளி மாணவியர்களுக்கு குழந்தை திருமணம், போக்சோ சட்டம், இளம் வயது கர்ப்பம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாணவிகளிடையே நடத்தப்பட்டது. மேலும், மாவட்டத்தின் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதே இதன் மிக முக்கிய நோக்கமாகவும் மற்றும் மிகவும் பின்தங்கிய குடும்பத்தினர், ஏழை மக்களிடையே பெண் கல்வியின் முக்கியத்துவத்தினை தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தெரிவிக்கப்பட்டது.


முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், புதுமைப்பெண் திட்டம் மற்றும் குழந்தைத்திருமண தடுப்புச்சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. படித்த பெண்கள் சிறந்த ஆரோக்கியத்தை அனுபவிப்பதற்கும், அதிக வருமானம் ஈட்டுவதற்கும் அவர்களின் சமூகங்கள் மற்றும் பொருளாதாரங்களுக்கு தீவிரமாகப் பங்களிப்பதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது. உலகெங்கிலும் உள்ள சிறுமிகளின் சாதனைகள் மற்றும் திறனைக் கொண்டாடப்படுகிறது. பெண்கள் பெரிய கனவு காணவும், நட்சத்திரங்களை அடையவும், பல்வேறு துறைகளில் தலைவர்களாகவும், நேர்மறையான மாற்றத்திற்கு பங்களிக்கவும் தூண்டப்படுகிறது.


பெண் குழந்தைகளை உயர்கல்வி வரை படிக்க வைக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் பொருளாதார அளவில் சுயமாக நிற்க உதவும். சமத்துவம் மற்றும் வளமான எதிர்காலத்தை அவர்களுக்கு கிடைக்க வழி செய்யும். பெண் கல்வியை ஊக்குவிக்கவும், குழந்தை திருமணத்தை தடுக்கவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதாந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. மேலும் முதலமைச்சரின் இரு பெண் குழந்தைகள் திட்டத்தின் கீழ் நிதியுதவிகள் என பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.ச.பவித்ரா, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.ம.சாந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஐ.ஜோதிசந்திரா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நா.நடராஜன், வட்டாட்சியர் திரு.க.சண்முகசுந்தரம், உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி.கலைச்செல்வி, ஆசிரியர் மற்றும் மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad