தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கோடியூர் நெடுஞ்சாலையில் நேற்று முன்னால் நின்று கொண்டிருந்த அரசு நகர பேருந்தின் மீது மோதாமல் இருக்க அரசு விரைவு பேருந்து ஓட்டுநர் பிரேக் போட்டுள்ளார். அதிகாலை முதல் சாரல் மழை பெய்ததாலும், சாலை வழுவழுப்பாக இருந்ததினாலும், திடிர் என பிரேக் போட்டதால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் ஒரு சுற்று சுற்றி கவிழ்ந்து விபத்திற்க்குள்ளானது. இதில் பயணம் செய்த 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதன் செய்தி எதிரொலியாக மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு விபத்து நடந்த சாலையில் ஜேசிபி இயந்திரம் கொண்டு சாலையின் குறுக்கே கோடு போடும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். வழுவழுப்பான சாலையால் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வரும் நிலையில் சாலையை சீரமைக்காமல் வெறும் கோடு போட்டு கண் துடைப்பு வேலையை செய்து வருவதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெயரளவிற்க்கு ஆய்வு செய்யும் அதிகாரிகள் விபத்து ஏற்படும்போது நிரந்தரமாக சாலையை சீர் செய்யாமல் சாலையின் குறுக்கே கோடு மட்டும் போடுவதால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை, எனவும் அரசியல்வாதிகளை மிஞ்சும் அளவிற்க்கு அதிகாரிகளின் செயல்பாடு உள்ளதாக அப்பாவி பொதுமக்கள் கண்ணீர் விடுகின்றனர்.
1 கருத்து:
சாலையை பெயர்த்து எடுத்து விட்டு புதிதாக சாலை போட்டால் தான் நன்றாக இருக்கும்
கருத்துரையிடுக