ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 19 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு; குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 அக்டோபர், 2024

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 19 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு; குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை.


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 19 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு. 6 வது நாளாக குளிப்பதற்கும் பரிசல் இயக்குவதற்கும் தடையானது தொடர்கிறது.

சில தினங்களாக காவேரி கரையோரங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக  ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து காவேரி கரையோரங்களில் பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. 


இந்நிலையில் நேற்று நிலவரப்படி தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் வினாடிக்கு 18 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 19000 கன அடியாக  நீர்வரத்து அதிகரித்துள்ளது.


இந்த நீர் வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி சினி அருவி மெயின் அருவி ஆகிய  அருவிகளின் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.


மேலும் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 6 வது நாளாக நீடித்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad