தர்மபுரி மாவட்டம், மகேந்திர மங்கலம் அடுத்த நடுகுட்லானஅள்ளி கிராமத்தில் நேற்றிரவு இரவு மின் இணைப்பை துண்டித்து விட்டு மர்ம நபர்கள் அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரை உடைத்து அதில் இருந்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காப்பர் காயில் மற்றும் ஆயிலை திருடி சென்றனர்.
இரவு முழுவதும் மின்சாரம் இன்றி தவித்த கிராம மக்கள், அடுத்த நாள் காலை டிரான்ஸ்பார்மர் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து ஜக்கசமுத்திரம் துணை மின் நிலையத்திற்க்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்க்கு வந்த மின் வாரிய அதிகாரிகள் டிரான்ஸ்பார்மர் உடைக்கப்பட்டு 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காப்பர் காயில் மற்றும் ஆயில் திருடி சென்றது கண்டறியப்பட்டது.
இது குறித்து மின்வாரிய உதவி இயக்குநர் மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மகேந்திரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து டிரான்ஸ்பார்மர் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக