மாரண்டஅள்ளி அருகே உள்ள தனியார் பால் நிறுவனத்தில் திருட முயன்று தப்பி சென்ற வழக்கில் சிறுவன் உட்பட இருவர் கைது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 அக்டோபர், 2024

மாரண்டஅள்ளி அருகே உள்ள தனியார் பால் நிறுவனத்தில் திருட முயன்று தப்பி சென்ற வழக்கில் சிறுவன் உட்பட இருவர் கைது.


தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த செங்கன்பசுவந்தலாவ் பகுதியில் தனியார் பால்நிறுவனம் செயல்பட்டு வருகிறது, இந்நிறுவனத்தில் கடந்த ஜூன் மாதம் 7-ஆம் தேதி இரவு சுமார் 10 மணிக்கு 2 மர்ம நபர்கள் பால் நிறுவனத்தின் பின்புறம் உள்ள காம்பவுண்ட் சுவர் மீது எகிறி குதித்து நிறுவனத்தின் குடோனில் இருந்து காப்பர் ஒயர்களை திருடி செல்ல முயன்றனர். சத்தம் கேட்டு பாதுகாவலர் வரவே தப்பி ஓடி தலைமறைவாகினர்.

இது குறித்து நிறுவன மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விசாரனை நடத்தியதில் மாரண்டஅள்ளி அடுத்த கொலசன அள்ளியை சேர்ந்த ஜெயசூர்யா (22)  மற்றும் மாரண்டஅள்ளி பகுதியை சேர்ந்த  16 வயது சிறுவன் என தெரிய வந்தது. அதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்த மாரண்டஅள்ளி காவல் துறையினர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad