வள்ளல் அதியமான் கோட்டத்தில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 28 அக்டோபர், 2024

வள்ளல் அதியமான் கோட்டத்தில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு.


தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் கீழ் இயங்கும் வள்ளல் அதியமான் கோட்டத்தில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடத்தினை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி விவரம்:

  • பதவி: நூலகர் மற்றும் காப்பாளர் (Librarian cum Caretaker)
  • ஊதியம்: ரூ.7700-24200 (சிறப்பு காலமுறை ஊதியம் 4)
  • காலிப்பணியிடங்கள்: 1 (ஒன்று)
  • இன சுழற்சி முறை: பழங்குடியினர் (Scheduled Tribes)


தகுதி:

  • பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் நூலக அறிவியல் மற்றும் தகவல் அறிவியல் சான்றிதழ் (C.L.I.S.)


வயது:

  • 01.07.2024 அன்று 18 முதல் 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:

தருமபுரி மாவட்ட இணையதளம் https://dharmapuri.nic.in/ மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து 08.11.2024 (வெள்ளிக்கிழமை) மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad