பாலக்கோடு ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு அக்க்ஷரா அப்பியாசம் விழா நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 12 அக்டோபர், 2024

பாலக்கோடு ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு அக்க்ஷரா அப்பியாசம் விழா நடைபெற்றது.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியில் கடந்த 2ம் தேதி  கொலு அமைக்கப்பட்டு நவராத்திரி விழா தொடங்கப்பட்டது. அக்டோபர் 12ம் தேதி காலை 11 மணிக்கு  விஜயதசமி 10ம் நாளான கொலு நிறைவு விழா மற்றும் வித்யாரம்பம் எனப்படும்  அக்க்ஷரா அப்பியாசம் தொடக்க விழா பள்ளியின் சேர்மேன் மூகாம்பிகை கோவிந்தராஜீ அவர்கள் தலைமையில்  நடைப்பெற்றது.


இந்நிகழ்சியில் கொலு பொம்மைகளுக்கு பூஜை செய்யப்பட்டு கற்பூர தீபாரதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து குழந்தைகளுக்கு அரிசியில் அக்க்ஷரம் எழுதும் நிகழ்ச்சியினை பள்ளி நிர்வாக இயக்குநர் சித்ரா அவர்கள் தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும்  பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad