பாலக்கோடு‌ அருகே நில தகராறில் அக்காவை தாக்கிய தம்பி கைது‌. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 12 அக்டோபர், 2024

பாலக்கோடு‌ அருகே நில தகராறில் அக்காவை தாக்கிய தம்பி கைது‌.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பி.முத்தூர் கிராமத்தை சேர்ந்த லட்சுமி (வயது.55) இவரது தம்பி சதிஷ் (வயது. 23) இவர்களது தந்தை முனிரத்தினம், சதிஷ் நிலம் தொடர்பாக தனது தந்தையிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.


கடந்த மாதம் 29ம் தேதி மீண்டும் சதிஷ்  தனது தந்தையிடம், தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை அவரது அக்கா லட்சுமி தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதிஷ் இலட்சுமியை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.


இதில் படுகாயமடைந்த இலட்சுமி பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டு இலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து சதிஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad