தருமபுரி, ரோட்டரி ஹாலில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 2024 – 2025 –ஆம் நிதியாண்டு கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோருக்கு செயல்படுத்தப்படும் திட்டம் குறித்த ஒருநாள் கருந்தரங்கிற்கு மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்,ஆர்,கே.பன்னீர் செல்வம் அவர்கள் தலைமையேற்று, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் 92 பயனாளிகளுக்கு ரூபாய் 5 இலட்சத்து 96 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 4.10.2024 அன்று வழங்கினார்.
இக்கருத்தரங்கில் மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்,ஆர்,கே.பன்னீர் செல்வம் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை, எளிய மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும், பொதுமக்களின் வாழ்வாதாரம், வாழ்க்கைதரம் உயரவும் பல்வேறு திட்டங்கள் மற்றும் பணிகளை அறிவித்து, செயல்படுத்தி வருகின்றார்கள்.
மேலும், மகளிரின் நலன் காத்து அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதில் எப்போதும் அக்கறையுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் தருமபுரி மாவட்டத்திற்கு 4 முறை வருகை புரிந்து, பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை இம்மாவட்டத்திற்கு வழங்கியுள்ளார். குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை பதிவு செய்யும் முகாம் தருமபுரி மாவட்டம் தொப்பூரிலும், ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் பாளையம் புதூரிலும் துவக்கி வைத்தார்.
தருமபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 2,84,091 குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 340 கோடி மதிப்பில் மாதந்தோறும் ரூ.1000/- மகளிர் உரிமைத்தொகை பெற்றும், விடியல் பயணத்திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் தினசரி 1,33,523 பெண் பயணிகள் பயணம் செய்தும் பயன்பெற்று வருகின்றனர். புதுமைப்பெண் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள கலை, அறிவியல், பொறியியல், தொழிற்படிப்பு, மருத்துவ கல்லூரிகளில் பயிலும் சுமார் 3.28 இலட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
இத்திட்டத்தினால் மாணவிகள் உயர்கல்வியில் சேரும் எண்ணிக்கை 34 சதவீதம் உயர்ந்துள்ளது. புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் 16,842 மாணவிகள் பயனடைந்துள்ளனர். தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் 68 கல்லூரிகளில் பயிலும் 6,939 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். மேலும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் திருமண நிதிதவித்திட்டம், மின் மோட்டர் பொருந்திய தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், புதுமைபெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டங்களும், சேவை இல்லம், அரசு பணிபுரியும் மகளிர் விடுதி, ஒருங்கிணைந்த சேவை மையம், கைம்பெண் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் ஓய்வூதியத்திட்டங்கள், திருநங்கையர் நலன், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், சத்துணவுத்திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் பெண் கல்வி ஊக்கத்தொகை திட்டம் ஆவின் பாலகம் அமைக்க மானியம், கறவை மாடுகள் வாங்க மானியம், இலவச வீட்டு மனை பட்டா, ஈமச்சடங்கு செலவினத்திற்கான உதவித்தொகை மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் வருமானச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ். குடியிருப்புச்சான்றிதழ். விதவைச்சான்றிதழ். திருமணமாகாத சான்றிதழ்களும், கைவிடப்பட்ட பெண் சான்றிதழ், சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ், முதல்பட்டதாரி சான்றிதழ். கல்வி இழப்புக்கான சான்றிதழ், விவசாய வருமானச்சான்றிதழ், சிறு மற்றும் விவசாயிகள் சான்றிதழ், சாதிச்சான்றிதழ். ஆண்வாரிசு இல்லா சான்றிதழ். கலப்புத்திருமணச்சான்றிதழ். பிற பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ், குடும்ப இடம் பெயர்வு சான்றிதழ். வேலையின்மை சான்றிதழ் போன்றவைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் 368 பயனாளிகள் ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டத்திலும், 33 பயனாளிகள் அன்னை தெரெசா ஆதவற்ற பெண் திருமண நிதியுதவி. 2 பயனாளிகள் டாக்டர் தர்மாம்பாள் நினைவு வீதவை மறுமண நிதியுதவித் திட்டத்திலும், 109 பயனாளிகள் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண நிதியுதவி திட்டத்திலும், 1017 பயனாளிகள் முதலமைச்சரின் இரு பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திலும், 210 பயனாளிகள் சத்தியவாணி அம்மையார் நினைவு இலவச தையல் வழங்கும் திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர்,
பெண்கள் இதுபோன்ற எண்ணற்ற பல திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்வில் மென்மேலும் முன்னேற்றமடைவதோடு, வாழ்வாதாரத்திலும், பொருளாரத்திலும் சிறப்பான நிலையான அடைய வேண்டும். இவ்வாறு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்தார். இதனைதொடர்ந்து சமூக நலத்துறை சார்பில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2024-2025 ஆம் நிதியாண்டில் புதியதாக விண்ணப்பித்த 86 பயனாளிகளுக்கு ரூ.4,35,659/- மதிப்பில் வைப்பீடு இரசீதுகள் மற்றும் 18 வயது முடிவடைந்த பெண்குழந்தைகளுக்கு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதிர்வுத் தொகைக்கான காசோலைகளையும், திட்ட இயக்குநர் மகளிர் திட்டத்திலிருந்து 6 பயனாளிகளுக்கு ரூ. 1,60,000/- மதிப்பில் நலிவுநிலை குறைப்பு நிதிக்கான காசோலைகள் என மொத்தம் 92 பயனாளிகளுக்கு ரூபாய் 5 இலட்சத்து 96 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
இக்கருத்தரங்கில் பெண்கள் நல திட்டங்கள் குறித்த சிறந்த கருத்தாளர்களை கொண்டு நிதியினை முறையாக கையாளுதல், சொத்துரிமை, குடும்ப வன்முறைகளில் இருந்து பாதுகாப்பு, இலவச சட்ட உதவி, அரசின் மூலம் செயல்படும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இக்கருத்தரங்கில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.எஸ்.மகேஸ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் முனைவர்.பழனியப்பன், இணை இயக்குநர் (மருத்துவம்) மரு.சாந்தி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திருமதி.லலிதா, தருமபுரி நகர்மன்ற தலைவர் திருமதி.மா.இலட்சுமி, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.பவித்ரா, கைம்பெண் நலவாரிய உறுப்பினர் திருமதி.எம்,ரேணுகாதேவி, பழங்குடியினர் நலவாரிய உறுப்பினர் திரு.குணசேகரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பயனாளிகள் கலந்துக்கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக