மாரண்டஅள்ளியில் நடைப்பெற்ற அதிமுக செயல்வீரர்கள் வீராங்கனைகள் கூட்டத்தில், திமுக ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை கிடு கிடு உயர்வு என - முன்னாள் அமைச்சர் தங்கமணி காட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 அக்டோபர், 2024

மாரண்டஅள்ளியில் நடைப்பெற்ற அதிமுக செயல்வீரர்கள் வீராங்கனைகள் கூட்டத்தில், திமுக ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை கிடு கிடு உயர்வு என - முன்னாள் அமைச்சர் தங்கமணி காட்டம்.


தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளியில்  வடக்கு ஒன்றியம், மற்றும் பேரூர் கழகம் சார்பில் அதிமுக செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம், தர்மபுரி  மாவட்ட கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்களின் தலைமையில் மாரண்டஅள்ளி தனியார் மண்டபத்தில்  நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கில் செந்தில், நகர செயலாளர் கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இக்கூட்டத்திற்க்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் தங்கமணி அவர்கள்  கலந்து கொண்டு பேசியதாவது, அதிமுக தொடங்கி 52 வருடங்களில் 31 வருடங்கள் ஆட்சியில் இருந்துள்ளது. அதிமுகவிற்கு மக்களிடம் அதிக மதிப்பு உள்ளது. அரை நூற்றாண்டுக்கு மேலாக மக்கள் சேவையில் அதிமுக ஈடுபட்டுள்ளது.


ஆயிரம் கட்சிகள் இருந்தாலும் மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வது அதிமுக மட்டுமே. மக்களின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்வது அதிமுக மட்டுமே சுயநலமில்லாத தலைவர்களை கொண்ட இயக்கம் அதிமுக, புரட்சித்தலைவர் எம்ஜிஆரும், புரட்சித்தலைவி ஜெயலலிதாவும் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளனர்.‌ 


மக்களை ஏமாற்றக் கூடிய அரசாக திமுக அரசு உள்ளது. அவல ஆட்சியாக கொடுங்கோல் ஆட்சியாக  திமுக ஆட்சி உள்ளது. திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்து கூறுங்கள்.வரும் 2026 ல் ஆட்சி அமைக்கப் போவது அதிமுக தான்.திமுக ஆட்சியில் துவரம் பருப்பு பால் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைவாசியும் உயர்ந்துள்ளது.சொத்து வரி உயர்வு,பேருந்து கட்டண உயர்வு  என மக்களை திமுக அரசு வஞ்சித்து வருவதாக  பேசினார்.‌


இக்கூட்டத்தில் மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட அவைத் தலைவர் நாகராசன், தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால்,  முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன், டாக்டர் அசோகன்,  மாவட்ட கவுன்சிலர் சரவணன், நகர செயலாளர் ராஜா, தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் பாடி கோவிந்தசாமி, ஒன்றிய செயலாளர் ராஜா, ஒன்றிய அவைத் தலைவர் சண்முகம், ஒன்றிய இணை செயலாளர்கள், அண்ணாமலை, ராஜம்மாள் மணிவண்ணன்,பொருளாளர் ராஜேந்திரன், நகர கழக நிர்வாகிகள், மல்லாபுரம் சதீஷ், சுரேஷ், அரவிந்தன், ரமேஷ், வெங்கடேசன், புதுர்சுப்ரமணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொன்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad