காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் மாரண்டஅள்ளி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. முருகன் உள்ளிட்ட குழுவினர், மாரண்டஅள்ளி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் ஆய்வு செய்த போது கெண்டயனள்ளி ஊராட்சி, பாறை கொட்டாயில் ஒரு பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதன் அடிப்படையில் மேற்படி கடை மீது நடவடிக்கை மேற்கொள்ள மாரண்டள்ளி காவல் ஆய்வாளர் திரு. பாலசுப்பிரமணியன் பரிந்துரையின் பேரில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ்., அவர்கள் மேற்படி புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட பெட்டி கடை உரிமையாளருக்கு ரூபாய். 25000 உடனடி அபராதமும் கடை இயங்க தடை விதித்த நோட்டீஸ் வழங்கி கடையை மூடிட உத்தரவிட்டதன் அடிப்படையில் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் முருகன் இணைந்து மேற்படி கடையை மூடி உடன் அபராதம் செலுத்திடவும், கடை இயங்க தடை விதித்த நோட்டீஸ் வழங்கி, மறு உத்தரவு வரும் வரை கடை திறக்க கூடாது என எச்சரித்து சென்றனர்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவின் பேரில் ,மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் மாவட்ட காவல்துறை இணைந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக