தமிழ்நாடு அரசால் செயல்படுத்தபட்டுவரும் கல்வி சார்ந்த நலத்திட்டங்களை மாணாக்கர்கள் பயன்படுத்தி, கல்வியில் உயர்ந்த இடத்தை அடைய பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் - மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 அக்டோபர், 2024

தமிழ்நாடு அரசால் செயல்படுத்தபட்டுவரும் கல்வி சார்ந்த நலத்திட்டங்களை மாணாக்கர்கள் பயன்படுத்தி, கல்வியில் உயர்ந்த இடத்தை அடைய பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் - மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள்.


மாணவ, மாணவியர்கள் மிகச்சிறந்த கல்வி கற்பதன் மூலம் நல்ல வேலைவாய்ப்பு பெற்று பொருளாதாரத்திலும், வாழ்க்கைதரத்திலும் மேம்படுத்திகொள்ள முடியும். தமிழ்நாடு அரசால் செயல்படுத்தபட்டுவரும் கல்வி சார்ந்த நலத்திட்டங்களை மாணாக்கர்கள் பயன்படுத்தி, கல்வியில் உயர்ந்த இடத்தை அடைய பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் - மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்.

தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம் மற்றும் உள்வட்டம், மிட்டாநூலஅள்ளி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் 167 பயனாளிகளுக்கு ரூபாய் 84 இலட்சத்து 18 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கினார்.


தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம் மற்றும் உள்வட்டம், மிட்டாநூலஅள்ளி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. மணி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலையில் 167 பயனாளிகளுக்கு ரூபாய் 84 இலட்சத்து 18 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை இன்று (09.10.2024) வழங்கினார்.


இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய்த் துறையின் சார்பில் 56 பயனாளிகளுக்கு ரூ.26.88 இலட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டா, 16 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம், 10 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டாக்களையும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூபாய் 98 ஆயிரத்து 400 மதிப்பீட்டில் குடும்ப அட்டைகளும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு ரூ.3.58 இலட்சம் மதிப்பீட்டில் திருமண உதவித்தொகை மற்றும் இயற்கை மரண உதவித்தொகைகளையும், ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் 29 பயனாளிகளுக்கு ரூ.30.60 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் 4 விவசாயிகளுக்கு ரூ.1.22 இலட்சம் மதிப்பீட்டில் சொட்டுநீர் பாசனம் அமைத்தல், இராகி செயல்விளக்கம் மற்றும் வேளாண் நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 2 விவசாயிகளுக்கு ரூ.1.61 இலட்சம் மதிப்பீட்டில் சொட்டுநீர் பாசனம் அமைத்தல் மற்றும் வெங்காய சேமிப்பு கிடங்கு அமைப்பதற்கான உதவிகளையும், கூட்டுறவு துறையின் சார்பில் 25 விவசாயிகளுக்கு ரூ.19.32 இலட்சம் மதிப்பீட்டில் பயிர்கடன்களையும் என மொத்தம் 167 பயனாளிகளுக்கு ரூபாய் 84 இலட்சத்து 18 ஆயிரம் (ரூ.84,18,327/-) மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.


முன்னதாக, இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் வருவாய்த்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வேளாண்மைத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, தோட்டக்கலைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மகளிர் திட்டம், சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், கால்நடை பராமரிப்பு துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.


இம்மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்கள் தொடர்பு திட்ட முகாமானது பின்தங்கிய பகுதிகளை தேர்வு செய்து, அங்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் எடுத்துரைத்து, அப்பகுதி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறக்கூடிய ஒரு நிகழ்வாக அமைய வேண்டுமென்றும், முதியவர்களுக்கும், பெண்களுக்கும், பொது மக்களுக்கும், தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை எடுத்துக்கூறும் விதமாக நகரப்பகுதிக்கு இணையாக அரசின் சேவைகள், அடிப்படை வசதிகள் மலை கிராம மக்களுக்கு கிடைக்க முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, இன்றைய தினம் தருமபுரி மாவட்டம், மிட்டாநூல அள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்டத்தின் அனைத்துதுறை முதன்மை அலுவலர்களும் பங்கேற்கும் வகையில் இன்றைய தினம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நூலஅள்ளி, சின்ன நூலஅள்ளி, எம்.சவுளூர், திருமலைகொட்டாய், கொல்லகொட்டாய், கதிர்வேல்கொட்டாய், அந்தேரி கொட்டாய், கோபால்அள்ளி, பழனிகொட்டாய், பூசால்கொட்டாய், உழவன்கொட்டாய், பொதலைகாரன்கொட்டாய், வட்டாளிகொட்டாய், கொளவிகண்ணன் கொட்டாய், மண்டிகான்தோப்பு, நல்லம்பள்ளியான் கொட்டாய், வேடிகொட்டாய் உள்ளிட்ட குக்கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வேண்டும் என்ற நோக்கிலும், மக்களின் சிரமங்களை போக்கும் வகையிலும் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறுகின்றது. 


இம்முகாமில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் துறை அலுவலர்கள் தங்களின் துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்துள்ளனர். மேலும், தமிழ்நாடு அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த கண்காட்சி அரங்குகள் விளக்க கையேடுகள் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் தயாரித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் மக்கள் தொடர்பு முகாம்களில் வழங்கப்படுகிறது. 


வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறைகளில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. விவசாய பெருமக்கள் கால்நடை வளர்ப்பு பணிகளில் ஈடுபடுவோர் அரசின் திட்டங்களை பெற்று, பயன்பெற வேண்டும். மாணவ, மாணவியர்களின் எதிர்காலத்திற்கு கல்வி ஒன்றே மிகச்சிறந்த நன்மைபயக்ககூடியது. கல்வி கற்பதன் மூலம் நல்ல வேலைவாய்ப்பு பெற்று பொருளாதாரத்திலும், வாழ்க்கைதரத்திலும் நம்மை மேம்படுத்திகொள்ள முடியும். பின்தங்கிய வகுப்பை சாரந்தவர்கள் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று, வேலைவாய்ப்பு பெறும் வகையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளதால், பெற்றோர்கள் பெண் குழந்தைகளை படிக்க வைத்து, போட்டித்தேர்வுகள் எழுதி அரசு பணிக்கு செல்ல ஊக்க அளிக்க வேண்டும்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உயர்கல்வி பயில புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம், தமிழ்புதல்வன் திட்டத்தின் கீழ் ஆண் பிள்ளைகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்குகிறது. மாணவ, மாணவியர்கள் இந்த நிதியுதவியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி, கல்வியில் மேன்மையடைய வேண்டும்.


இன்றைய தினம் நடைபெறும் மக்கள் தொடர்பு திட்ட முகாமிற்கு முன்கூட்டியே மனுக்கள் பெறுவது தொடர்பாக இப்பகுதி சுற்றுவட்டார கிராமங்களில் விழிப்புணர்வு செய்யப்பட்டு, வருவாய்துறை மற்றும் பிறத்துறை சார்ந்த அலுவலர்கள் முன்பாகவே இங்கு வருகைதந்து பொதுமக்களிடம் 146 கோரிக்கை மனுக்களை பெற்று, தகுதி வாய்ந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, இன்றைய தினம் 167 பயனாளிகளுக்கு ரூபாய் 84 இலட்சத்து 18 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கை மனுக்கள் உரிய முறையில் கள ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் வழங்கப்படும். அரசு மக்களின் உயர்வுக்காக திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. அத்தகைய திட்டங்களை பொதுமக்களும் முழுமையாக அறிந்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார். இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.இரா.காயத்ரி, ஒன்றியக் குழு உறுப்பினர் திரு.கோபால், தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு.சுப்பிரமணி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொ) திரு.குணசேகரன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் திருமதி.பாத்திமா, மீன்வளத்துறை உதவி இயக்குநர் திரு.கோகுலரமணன், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.பவித்ரா, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.செம்மலை, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி, தருமபுரி வட்டாட்சியர் திரு.க.சண்முகசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி.சத்யா, திருமதி.கலைவாணி, மிட்டாநூலஅள்ளி ஊராட்சிமன்ற தலைவர் திருமதி.பச்சியம்மாள், துணைத்தலைவர் திரு.சஞ்சய் உட்பட அனைத்து துறை மாவட்ட அளவிலான முதல் நிலை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad