தருமபுரியில் மக்களுடன் முதல்வர் திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 அக்டோபர், 2024

தருமபுரியில் மக்களுடன் முதல்வர் திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்.


ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டத்தில் 70 முகாம்கள் நடத்தப்பட்டு மொத்தம் 26,243 கோரிக்கை மனுக்கள் ஏற்பளிக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 3 ஆண்டுகால ஆட்சியில் 18 இலட்சம் மக்கள் தொகை கொண்ட தருமபுரி மாவட்டத்தில் சுமார் 3 இலட்சத்து 57 ஆயிரம் பயனாளிகள் அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற்றுள்ளனர்.

தருமபுரி மாவட்டம், அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில் ஊரகபகுதிகளில் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்களில் பயன்பெற்ற 142 பயனாளிகளுக்கு ரூ.1.58 கோடி மதிப்பில் அரசு நலதிட்ட உதவிகள் மற்றும் 391 பயனாளிகளுக்கு ரூ.51.89 இலட்சம் மதிப்பில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் என மொத்தம் 533 பயனாளிகளுக்கு ரூ.2.09 கோடி மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று வழங்கினார்.


தருமபுரி மாவட்டம், அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில் ஊரகபகுதிகளில் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்களில் பயன்பெற்ற 142 பயனாளிகளுக்கு ரூ.1.58 கோடி மதிப்பில் அரசு நலதிட்ட உதவிகள் மற்றும் 391 பயனாளிகளுக்கு ரூ.51.89 இலட்சம் மதிப்பில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் என மொத்தம் 533 பயனாளிகளுக்கு ரூ.2.09 கோடி மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (17.10.2024) வழங்கினார்.


மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் ஊரகப்பகுதிகளில் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்களில் கோரிக்கை மனுக்கள் வழங்கி, பயன்பெற்ற பயனாளிகளில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.1.89 இலட்சம் மதிப்பில் சக்கர நாற்காலி, செயற்கை கால்கள், பேட்டாரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளையும், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.14.14 இலட்சம் மதிப்பில் சூரிய உலர்த்தி, சூரிய சக்தியால் இயங்கும் பம்ப்செட்டுகளையும், வேளாண்மைத் துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.3.17 இலட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த பண்ணையம், ரொட்டோவேட்டர்களையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.15,150/- மதிப்பில் பழச்செடி தொகுப்பு, நகரும் காய்கறி வண்டியினையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 87 பயனாளிகளுக்கு ரூ.13.19 இலட்சம் மதிப்பில் காய்கறி, பூ வியாபாரம், சிற்றுண்டி கடை, பெட்டிகடை, உணவகம், கோழிவளர்ப்பு போன்றவற்றிற்கான கடனுதவிகள், கிறித்துவ நலவாரிய அடையாள அட்டைகள், தையல் இயந்திரங்களையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் 25 பயனாளிகளுக்கு தலா ரூ.5.00 இலட்சம் மதிப்பில் மருத்துவ காப்பீடு என ரூ.1.25 கோடி மதிப்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுதிட்ட அட்டைகள் என மொத்தம் 142 பயனாளிகளுக்கு ரூ.1.58 கோடி மதிப்பில் அரசு நலதிட்ட உதவிகள் மற்றும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் 391 பயனாளிகளுக்கு ரூ.51.89 இலட்சம் மதிப்பில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் ஆக மொத்தம் 533 பயனாளிகளுக்கு ரூபாய் 2 கோடியே 9 இலட்சத்து 43 ஆயிரத்து 278 (ரூ.2,09,43,278/-) மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.


பின்னர் மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை, எளிய மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும், பொதுமக்களின் வாழ்வாதாரம், வாழ்க்கைதரம் உயரவும் பல்வேறு திட்டங்கள் மற்றும் பணிகளை அறிவித்து, செயல்படுத்தி வருகின்றார்கள்.


மேலும், மகளிரின் நலன் காத்து அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதில் எப்போதும் அக்கறையுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.  தருமபுரி மாவட்டத்தில் தான் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால்முதன் முதலில் 1989-ஆம் ஆண்டு ஏழை எளிய மகளிரைக் கொண்டு மகளிர் சுய உதவிக்குழுக்கள் துவங்கப்பட்டது. மகளிர் சுயதொழில் மேற்கொண்டு பயன்பெறும்வகையில் பல்வேறு வங்கிகள் மூலம் மகளிர் சுயஉதவிக்குழு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.


முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் வழியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் தருமபுரி மாவட்டத்திற்கு 4 முறை வருகை புரிந்து, பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை இம்மாவட்டத்திற்கு வழங்கியுள்ளதோடு, குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை பதிவு செய்யும் முகாம் தருமபுரி மாவட்டம் தொப்பூரிலும், ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் பாளையம் புதூரிலும் துவக்கி வைத்து, தருமபுரி மாவட்டத்திற்கு பெருமைசேர்த்துள்ளார்.


தருமபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 2,84,091 குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- மகளிர் உரிமைத்தொகை பெற்றும், விடியல் பயணத்திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் சுமார் 11 கோடியே 57 ஆயிரம் பயணங்களை மகளிர் மேற்கொண்டு பயன்பெற்று வருகின்றனர். புதுமைப்பெண் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள கலை, அறிவியல், பொறியியல், தொழிற்படிப்பு, மருத்துவ கல்லூரிகளில் பயிலும் சுமார் 3.28 இலட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் 16,842 மாணவிகள் பயனடைந்துள்ளனர். தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் 68 கல்லூரிகளில் பயிலும் சுமார் 6,339 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மாணவ, மாணவியர்களுக்கு இலவச பேருந்து பயணச்சலுகைகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார். 


இதன் மூலம் இன்றும் மாணவ, மாணவியர்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும், தருமபுரி மாவட்டத்தில் 59,963 விவசாயிகளுக்கு ரூ.28.00 கோடி மதிப்பில் பயிர் காப்பீடு கடன் வழங்கப்படுகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 3 ஆண்டுகால ஆட்சியில் 18 இலட்சம் மக்கள் தொகை கொண்ட தருமபுரி மாவட்டத்தில் சுமார் 3 இலட்சத்து 57 ஆயிரம் பயனாளிகள் அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற்றுள்ளனர். மேலும், எதிர்கட்சியினர் உட்பட தமிழ்நாடு மக்கள் அனைவரும் பாராட்டு வகையில் களத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களோடு மக்களாக, மக்களுக்காக பணியாற்றி வருகிறார்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாகவும், அவர்களின் இருப்பிடத்திலேயும் கிடைக்க முதற்கட்டமாக நகர்ப்புற பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு, தருமபுரி நகர பகுதிகளில் 13946 மனுக்கள் பெறப்பட்டு, 5,945 மனுக்கள் ஏற்பளிக்கப்பட்டு, 827 பயனாளிகளுக்கு ரூபாய் 33 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்

வழங்கப்பட்டது.

இதனைதொடர்ந்து, இரண்டாம் கட்டமாக ஊரகபகுதிகளுக்கான "மக்களுடன்

முதல்வர்" திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டத்தில் 11.07.2024 முதல் 04.09.2024 வரை

அனைத்து ஊரகப்பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் நடைபெறும் 70 முகாம்களில்

15 அரசு துறைகள் மூலம் 44 வகையான சேவைகள் தொடர்பாக விரைந்து தீர்வுகாணும்

வகையில் 46,830 மனுக்கள் பெறப்பட்டதில், 26243 மனுக்கள் ஏற்பளிக்கப்பட்டது.

ஏற்பளிக்கப்பட்ட மனுக்களில் முதற்கட்டமாக 307 பயனாளிகளுக்கு ரூ.2.26 கோடி

மதிப்பிலும், 2-ஆம் கட்டமாக 100 பயனாளிகளுக்கு ரூ.1.19 கோடி மதிப்பிலும் அரசு

நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இன்றைய தினம் 142 பயனாளிகளுக்கு ரூ.1.58

கோடி மதிப்பில் அரசு நலதிட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மேலும், 391

பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படுகிறது.

தருமபுரி மாவட்ட பொதுமக்கள் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தி வருகின்ற

எண்ணற்ற பல திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்வில் மென்மேலும்

முன்னேற்றமடைவதோடு, வாழ்வாதாரத்திலும், பொருளாரத்திலும் சிறப்பான நிலையான


அடைய வேண்டும். இவ்வாறு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை

அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. மணி, தருமபுரி

சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.பி.வெங்கடேஷ்வரன், பென்னாகரம் சட்ட மன்ற

உறுப்பினர் திரு. ஜி. கே. மணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.எஸ்.

மகேஸ்வரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.கௌரவ்குமார், இ.ஆ.ப., மாவட்ட

வருவாய் அலுவலர் திருமதி. ஆர்.கவிதா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்

திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, திரு.இன்பசேகரன், வருவாய் கோட்டாட்சியர்

திருமதி.இரா.காயத்ரி, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு. செம்மலை, நகர்மன்றத்

தலைவர் திருமதி.மா.இலட்சுமி, தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு.சுப்பிரமணியம்,

பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.சையது முகைதீன் இப்ராகிம், முன்னாள்

நாடாளுமன்ற உறுப்பினர் திரு.மனோகரன், கைம்பெண் நல வாரிய உறுப்பினர்

திருமதி.ரேணுகாதேவி, வட்டாட்சியர்கள் திருமதி.கனமொழி, திரு.சண்முகசுந்தரம்,

ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி. கவிதா முருகன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள்,

அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad