தருமபுரி மாவட்டத்தில் எதிர்வரும் 02.10.2024 (புதன் கிழமை) “காந்தி ஜெயந்தி தினம்” அன்று தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL-3, FL-3A / FL-4A உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள்/முன்னாள் படை வீரர் மதுவிற்பனைக் கூடம் அனைத்தும் 01.10.2024 இரவு 10.00 மணி முதல் 03.10.2024 காலை 12.00 மணி வரையும் மதுபானங்கள் விற்பனை இன்றி மூடி வைக்க உத்தரவிடப்படுகிறது. மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
Post Top Ad
செவ்வாய், 1 அக்டோபர், 2024
'குடி'மக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தகடூர் குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக