தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் II (தொகுதி II மற்றும் II A பணிகள்) முதல்நிலைத் தேர்வானது (தகுதி தேர்வு) கடந்த 14.09.2024 அன்று நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து 1,820 காலிப்பணியிடங்கள் கொண்ட TNPSC-GROUP-IIA பணிகளுக்கான முதன்மைத் தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் பயன்பெறும் வகையில், இலவச பயிற்சி வகுப்பானது தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 30.09.2024 அன்று துவங்கப்பட்டு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரந்தோறும் தொடர்ந்து நடைபெற உள்ளது.
எனவே இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் இந்த https://t.ly/KssK9 இணைப்பின் மூலம் தங்களை பதிவு செய்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கடந்த 2022ஆம் ஆண்டு TNPSC GROUP-IIA தேர்வில் இவ்வலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பில் பயின்ற தேர்வர்கள் பல்வேறு துறைகளில் பணிவாய்ப்பு பெற்று உதவியாளராக பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இவ்வலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் அல்லது இவ்வலுவலக தொலைபேசி எண் 04342–296188 வாயிலாக தொடர்பு கொள்ளலாம். இம்மாவட்டத்தில் தகுதி வாய்ந்த தேர்வர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம், என தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக