தேர்வு மையங்களில் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுஅளவில் செய்யப்பட்டுள்ளன. அனைத்து தேர்வு மையங்களிலும் பேருந்துகள் நின்று செல்லும் வகையிலும், சிறப்பு பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையத்திற்கு செல்லவும், கடைசிநேர அலைச்சல்களை தவிர்க்குமாறும், தேர்வாணைய விதிமுறைகளை முழுமையாக படித்து கடைபிடிக்குமாறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், தேர்வர்களின் அனுமதிச் சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு தேர்வர்கள் தேர்வு நாளான 26.10.2024 அன்று காலை 08.30 மணி முதல் 09.00 மணி வரையிலும், பிற்பகல் 01.30 மணி முதல் 02.00 மணி வரையிலும் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். தாமதமாக வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு மையங்களுக்குள் தேர்வர்கள் மொபைல் போன் மற்றும் புளுடூத் உள்ளிட்ட மின்னனு சாதனங்கள் எதுவும் எடுத்து வரவேண்டாம். தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திற்கு உரிய நேரத்திற்குள் செல்லுமாறு தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக