வரும் 16,17 தேதிகளில் தருமபுரி வட்டத்தில் ”உங்களைத்தேடி உங்கள் ஊரில்" திட்ட முகாம் - மாவட்ட ஆட்சியர் தகவல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 அக்டோபர், 2024

வரும் 16,17 தேதிகளில் தருமபுரி வட்டத்தில் ”உங்களைத்தேடி உங்கள் ஊரில்" திட்ட முகாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்.


மக்களைநாடி, மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண மாண்புமிகு தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட ”உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டம் ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டத்தில் நடைபெற வேண்டும் என்பதன் அடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் 2024 அக்டோபர் மாதத்திற்கான முகாம் தருமபுரி வட்டத்தில் வரும் 16.10.2024 அன்று காலை 09.00 மணி முதல் 17.10.2024 காலை 09.00 மணி வரை நடைபெற உள்ளது. 

மேற்படி நாளில் மாவட்ட ஆட்சியர் வருவாய் வட்டத்தில் இருந்து கள தணிக்கையில், ஈடுபட்டு அரசு திட்டங்களை ஆய்வு செய்ய உள்ளார். மேலும் 16.10.2024 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் கள ஆய்வில் இருக்கும் மாவட்டத்தின் முதல்நிலை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டமும் அதனை தொடர்ந்து மாலை 4 மணிக்கு அரசு திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு சேர்த்தல் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து மனுக்களையும் பெற உள்ளார்கள் என தெரிவிக்கப்படுகிறது, என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad