பென்னாகரம் அருகே அஜ்ஜன அள்ளி ஊராட்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட ஊராட்சிக்கு சொந்தமான நிலத்தை மீட்க கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 25 நவம்பர், 2024

பென்னாகரம் அருகே அஜ்ஜன அள்ளி ஊராட்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட ஊராட்சிக்கு சொந்தமான நிலத்தை மீட்க கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு.


தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் பென்னாகரம் அருகே அஜ்ஜன அள்ளி ஊராட்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட ஊராட்சிக்கு சொந்தமான நிலத்தை மீட்க கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு.
 

பென்னாகரம் வட்டம் ஏரியூர் அருகே உள்ள அஜ்ஜன அள்ளி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் சாந்தியிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் அருகே உள்ள அஜ்ஜனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மாந்தோட்டம் பகுதியில் உள்ள நிலத்தை காலகாலமாக வருடத்திற்கு ஒருமுறை ஏலம் விடுவது வழக்கம், இந்த நிலையில் இந்த நிலத்தை ஏலம் எடுத்தவர் போலி ஆவணங்கள் மூலம் அவரது சொந்த நிலம் போல பயன்படுத்தி வருகிறார்‌. 


எனவே மாவட்ட நிர்வாகம் அதிகாரிகள் மூலம் நிலத்தை சர்வே செய்து ஊராட்சிக்கு சொந்தமான நிலத்தை மீட்டெடுத்து கிராமத்தில் உள்ள பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு மைதானத்தை அரசு அமைத்து கொடுக்க வேண்டும் மேலும் அந்த இடத்தில் மரங்களை நட்டு வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad