காரிமங்கலம் கெரகோடஅள்ளியில் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன்.MLA இல்லத்தில் மாற்று கட்சியை சார்ந்த திரளானோர் அதிமுகவில் இணைந்தனர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 நவம்பர், 2024

காரிமங்கலம் கெரகோடஅள்ளியில் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன்.MLA இல்லத்தில் மாற்று கட்சியை சார்ந்த திரளானோர் அதிமுகவில் இணைந்தனர்.


தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளியில் உள்ள முன்னாள் அமைச்சர், கே.பி. அன்பழகன். MLA இல்லத்தில் பாலக்கோடு வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கெண்டேணே அள்ளி ஊராட்சிகுட்பட்ட மாற்று கட்சியினர் இணையும் நிகழ்ச்சி, பாலக்கோடு அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கில் செந்தில் தலைமையில் நடைப்பெற்றது.


நிகழ்ச்சிக்கு தகவல் தொழில்நுட்ப பிரிவு வடக்கு ஒன்றிய செயலாளர் திரு.கோ.ராஜா, மணி தலைவர், சம்பத், அன்பு, ராமசாமி தலைவர்,சபரி, ஜெயபால்,தாசப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதில் மாரண்டஅள்ளி அடுத்த கெண்டேனஅள்ளி கிராமத்தை சேர்ந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த ஒன்றிய மாணவர் அணி செயலாளர் ஈஸ்வரன், தேமுதிக கிளை தலைவர் மாரப்பன், தேமுதிக நிர்வாகி அரவிந்தன் ஆகியோர் தலைமையில் மாற்று கட்சியை சேர்ந்த தினேஷ் குமார், வெற்றி செல்வன், எழிலரசு, கிரி, மதிவாணன், மணிகண்டன் அன்பரசு, மாதையன், நாராயணன், மணிகண்டன் சதீஷ்குமார், சஞ்சய், சீனி, சதீஷ்ராஜா செந்தில்குமார் நாகராஜ் உதயகுமார், உள்ளிட்டோர் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்களின் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இனைத்துகொண்டனர்.


புதியதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்கள்  கட்சி வேட்டி துண்டு வழங்கி வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். இவர்களுடன் பாலக்கோடு வடக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவை சார்ந்த முரளி, வெற்றிவேலன், சத்யராஜ், சகாதேவன் ராமன் மற்றும் ஏராளமான தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad