கடந்த மாதம் தமிழக வெற்றிக் கழகம் பேணும் பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சியினை துவங்கினார், மாநிலம் முழுவதும் பொதுமக்களும், மாற்று கட்சியினர் என பலர் அக்கட்சியில் இணைந்து வருகின்றனர், அதன்படி தருமபுரி மாவட்டத்திலும் பலர் அக்கட்சியில் தங்களை இணைத்துக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர், இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 10க்கும் மேற்பட்டவர்கள் தங்களை தமிழக வெற்றிக் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் தாபா M.சிவா, மாவட்ட இளைஞர் அணி தலைவர் K.விஜயகாந்த், மாவட்ட நிர்வாகிகள் முருகன், மாவட்ட தொண்டர் அணி தலைவர் சுரேஷ், மாவட்ட வர்த்தக அணி தலைவர் கார்த்தி, கடத்தூர் ஒன்றிய தலைவர் M.விஜய் விக்கி ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக