வாக்களர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2025 தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 16 நவம்பர், 2024

வாக்களர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2025 தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.


வாக்களர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2025 தொடர்பான ஆய்வுக் கூட்டம் வாக்காளார் பட்டியல் பார்வையாளர் மருத்துவர்.இரா.ஆனந்தகுமார்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.


வாக்களர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2025 தொடர்பான ஆய்வுக் கூட்டம் வாக்காளார் பட்டியல் பார்வையாளர் மருத்துவர். இரா.ஆனந்தகுமார்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (16.11.2024) நடைபெற்றது.


இக் கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் / நீக்கல் / திருத்தல் தொடர்பான வாக்களர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2025ஆனது 29.10.2024 முதல் 28.11.2024 வரையில் தருமபுரி மாவட்டத்தில் நடைபெறுகிறது. இப்பணியினை பார்வையிடுவதற்கு, இந்திய தோதல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஊரக வளாச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் (பயிற்சி), ஆணையர் மருத்துவர் இரா..ஆனந்தகுமார், இ,ஆ,ப., அவர்கள் (16.11.2024) இன்று வருகைபுரிந்திருந்தார்.


மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற வாக்களர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2025 தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில், தேர்தல் பார்வையாளர், இரா.ஆனந்தகுமார், இ,ஆ,ப., அவர்கள் கலந்துகொண்டு மக்கள் பிதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் ஆலோசனை நடத்தினார். மேலும், வாக்காளர் பட்டியலில் தகுதியான அனைத்து நபர்களின் பெயர்களையும் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உரிய விசாரணை மேற்கொள்ளாமல் வாக்காளர் பட்யடிலில் உள்ள எந்தவொரு வாக்காளர்களின் பெயர்களை நீக்க கூடாது எனவும் அரசு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


முன்தாக வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், ஊரக வளாச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் (பயிற்சி), ஆணையர் மருத்துவர் இரா..ஆனந்தகுமார், இ,ஆ,ப., அவர்கள் தருமபுரி ஒன்றியம், குண்டலபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/ நீக்கல் / திருத்தல் தொடர்பான வாக்களர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாமை நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.


இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா.கவிதா, வாக்காளர் பதிவு அலுவலர் / வருவாய் கோட்டாட்சியர் தருமபுரி, திருமதி.இரா.காயத்ரி, வாக்காளர் பதிவு அலுவலர் / வருவாய் கோட்டாட்சியர் அரூர், திரு. v. சின்னுசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.இரா.க.கவிதா, தேர்தல் தனிவட்டாட்சியர் திரு.அ.அசோக்குமார், அனைத்து வட்டாட்சியர்கள், தேர்தல் துணை வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad