தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு புதிய தேசிய நெடுஞ்சாலை வழியாக கர்நாடகாவில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பொருட்களை கடத்துவதாக பாலக்கோடு டி.எஸ்.பி.மனோகரன் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், இன்று விடியற்காலை 4 மணிக்கு உதவி காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் மகேந்திரமங்கலம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த இன்னோவா சொகுசு காரை போலீசார் நிறுத்த கூறினர். போலீசாரை கண்டதும் காரை நிறுத்திவிட்டு காரில் இருந்தவர் தப்பி ஓடி தலைமறைவாகினர். போலீசார் காரை சோதனை செய்ததில் அதில் சுமார் 40 மூட்டைகளில் 3 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 1 டன் குட்கா கடத்தி வந்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து 8 இலட்சம் ரூபாய் மதிப்பிலான சொகுசு காரை குட்கா மூட்டைகளுடன் பறிமுதல் செய்த போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடி தலைமறைவானர்வர்களை தேடி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களை பார்வையிட்ட டி.எஸ்.பி மனோகரன் கூறுகையில் தொடர்ந்து குட்கா பொருட்கள் கடத்தல் குறித்து தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குட்கா கடத்துபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக