தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், ஜோதி மஹாலில் இன்று (17.11.2024) நடைபெற்ற 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா-2024, மாவட்ட அளவிலான அரசு விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் பயனாளிகளுக்கு பல்வேறு கடனுதவிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்கள்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.கே.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஸ்வரன், முன்னாள் அமைச்சர் முனைவர் பி.பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, திரு.மனோகரன், திரு.இன்பசேகரன், தருமபுரி நகர்மன்ற தலைவர் திருமதி.மா.லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ஆர்.கவிதா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு.கு.த.சரவணன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் திருமதி.எஸ்.மலர்விழி உட்பட கூட்டுறவாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக