மாரண்டஅள்ளியில் 7-வது தேசிய இயற்கை மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 18 நவம்பர், 2024

மாரண்டஅள்ளியில் 7-வது தேசிய இயற்கை மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது.

மாரண்ட அள்ளி அரசு மகப்பேறு உதவி செவிலியர் பயிற்சி பள்ளியில் தேசிய 7-வது இயற்கை மருத்துவ தினமானது மகப்பேறு உதவி செவிலியர்களிடையே இயற்கை மருத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது.


இந்நிகழ்ச்சியை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சிவகுரு  மற்றும் பள்ளி முதல்வர் நிர்மலா தலைமை தாங்கினர். இந்த நிகழ்ச்சியில் பஞ்சபள்ளி யோகா மற்றும் இயற்கை மருத்துவர் டாக்டர் பிரித்விராஜ் இயற்கை மருத்துவ தினத்தின் கருப்பொருளான ஆரோக்கியமான முதுமை மற்றும் நீண்ட ஆயுள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அதன் பயன்கள் மூலமாக எளிய  வாழ்வியல் முறை பயிற்சிகள் அதனை பின்பற்றக்கூடிய வழிமுறைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். 


மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகப்பேறு உதவி செவிலியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பதப்படுத்தப்பட்ட பயிர்கள் முருங்கை இலை சாறு கருவேப்பிலை சாறு போன்ற இயற்கை மருத்துவ உணவுகள் மற்றும் சாறு வகைகள் வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக மாணவிகள் மற்றும் பொதுமக்கள் களிமண் குளியலை முகம் மற்றும் கைகளுக்கு பூசிய வண்ணம் யோக முத்திரைகள் மற்றும் சிரிப்பு யோகா முதலியவற்றை செய்து உற்சாகமடைந்தனர்.


இந்நிகழ்ச்சியில் பல்நோக்கு பணியாளர் வெங்கடேஸ்வரி மகப்பேறு உதவி செவிலியர் பயிற்சி பள்ளி அலுவலர்கள் ஜெயந்தி, கலைவாணி அம்பிகா மற்றும் மருத்துவ செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad