இலக்கியம்பட்டி பகுதியில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சுப் பணி அலுவலர்கள் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா நடந்தது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 16 நவம்பர், 2024

இலக்கியம்பட்டி பகுதியில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சுப் பணி அலுவலர்கள் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா நடந்தது.

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சுப் பணி அலுவலர் சங்க ஐம்பெரும் விழா மாநில தலைவர் சங்கர் தலைமையில் தர்மபுரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் ஏழு அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, துறையில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள் தட்டச்சர்களுக்கு உதவியாளர் பதவி உயர்வு உடனடியாக வழங்க வேண்டும் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை உடனடியாக அமல்படுத்த வேண்டும் நீதிமன்ற வழக்குகளை கவனிக்க சட்ட ஆலோசகர் பதவி உருவாக்க வேண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கால்நடை ஆய்வாளர் பயிற்சி உடனடியாக துவங்கிட வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. 


இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் சங்கர் தலைமை வகித்தார் மாநிலத் துணைத் தலைவர் சுல்தான் இக்ராகின் முன்னிலை வகித்தார் தர்மபுரி மாவட்ட தலைவர் கோவர்தன் வரவேற்புரையாற்றினார். மாநில பொருளாளர் கார்த்திக் வரவு செலவு அறிக்கை வாசித்தார் கூட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 300 க்கும் மேற்பட்ட அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad