தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்து பாப்பாரப்பட்டி அருகே கொம்பேடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னமாதன் இவரது மகன் புஷ்பாகரன் (34) கார்மெண்ட்ஸ் தொழில் செய்து வருகிறார்.இவர் திருப்பூரில் கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலை செய்யும்போது காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணம் ஆகி கடந்த இரண்டு வருடங்களாக மனைவியிடம் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து உள்ளதாக கூறப்படுகிறது.
இவர்களுக்கு குழந்தைகள் இல்லை இந்நிலையில் நேற்று இரவு பாப்பாரப்பட்டியில் இருந்து தர்மபுரி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் வேலம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற போர்வெல் வாகனத்தை முந்தி செல்லும்போது எதிரே வந்த வாகனம் மோதியதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார் போர்வெல் வாகனம் இவர் உடல் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த பாப்பாரப்பட்டி காவல்துறையினர் உடலை கைப்பற்றி தெரியாத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக