தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூரில் உணவு பாதுகாப்புத்துறை சார்பாக கடை வீதி வாசவிமகால் வளாகத்தில் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு பெற, மற்றும் புதுப்பித்தல் சார்ந்து விண்ணப்பங்கள் பெறும் முகாம் அனைத்து வணிகர் சங்க செயலாளர் லட்சுமி நாராயணன், நிர்வாகிகள் செந்தில், சுந்தர் மற்றும் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திருப்பதி, பாப்பிரெட்டிப்பட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் அருண் உள்ளிட்டோர் முன்னிலையில் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா, தலைமையில் நடைபெற்றது.
நியமன அலுவலர் தன் உரையில், தருமபுரி மாவட்டத்தில் அனைத்து உணவு வணிகர்களும் உரிய உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று இருத்தல் அவசியம். உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு இன்றி வணிகம் புரிந்தால் ஆறு மாதம் சிறை தண்டனையும் ஐந்தாயிரம் முதல் ஐந்து லட்சம் வரை அபராதம் விதிக்க உணவு பாதுகாப்பு சட்டம் வகுக்கப்பட்டுள்ளது என எச்சரிக்கை செய்தார்.
மேலும் முறையாக காலாவதி தினத்திற்கு முப்பது தினங்களுக்கு முன்பாக புதுப்பித்து கொள்ளுதல் அவசியம் என தெரிவித்துடன், தாங்கள் விற்பனை செய்யும் உணவுப் பொருட்களை உரிய லேபிள் நடைமுறை பின்பற்றவும் உரிய விவரங்கள் அச்சிடப்பட்டுள்ளதா என கண்காணித்து காலாவதி தேதிக்கு முன்பாக அவற்றை அப்புறப்படுத்துவது அவசியம் என்பதுடன் தன் சுத்தம், சுற்றுப்புற சுகாதாரம் மேம்பட இருத்தல் அவசியம் என தெரிவித்துக் கொண்டார். மேலும் நடமாடும் சாலையோர வணிகர்களுக்கு பதிவு கட்டணம் 5 ஆண்டுகளுக்கு விலக்களிக்கப்படுகிறது. அவர்கள் விண்ணப்ப கட்டணம் மட்டும் செலுத்தி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். தாங்களாகவே கட்டணம் இன்றி ஐந்தாண்டு புதுப்பித்தும் கொள்ளலாம் என்ற தகவலை தெரிவித்தார்.
காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் அவர்கள் ,உணவு வணிகர்கள் உரிமம் மற்றும் பதிவை உணவு பாதுகாப்பு அலுவலர் வழிகாட்டுதல் மூலமாகவோ அல்லது தாங்களாகவே https:// foscos.fssai.gov.in என்ற இணையதள முகவரியில் தாங்களாகவோ உரிய சான்றுகளை பதிவேற்றி உரிய கட்டணத்துடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம் , தற்போது தட்கல் முறையிலும் உடன் பதிவு மற்றும் உரிமம் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.
மாவட்ட நியமன அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் மூலம் உரிய ஆய்வுக்கு பின், தங்களுக்கு தாங்கள் இணையதளத்தில் குறிப்பிட்ட இணையதளம் முகவரியில் உணவு பாதுகாப்பு உரிம சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பதை எடுத்துரைத்தார். உணவு பாதுகாப்பு அலுவலர் திருப்பதி தாங்கள் பெரும் சான்றிதழ்களை கடைகளில் நுகர்வோர் காணும் வகையில் மாட்டி வைக்க வலியுறுத்தினார். இன்றைய முகாமில் கம்பைநல்லூர், இருமத்தூர், திப்பம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட வணிகர்கள் பங்கேற்று உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெற புதிய மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் அளித்தனர்.
இவை உரிய முறையில் பதிவேற்றப்பட்டு , உரிய ஆய்வுக்கு பின் அவர்களுக்கு குறித்த இணையதளம் முகவரியிலோ அல்லது மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என முகாமில் தெரிவிக்கப்பட்டது. இறுதியாக அனைத்து வணிகர் சங்க செயலாளர் லட்சுமிநாராயணன் அவர்கள் நன்றி உரையாற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக