கடமடை நெடுஞ்சாலையில் சைக்கிள் மீது சரக்கு லாரி மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பலி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 9 நவம்பர், 2024

கடமடை நெடுஞ்சாலையில் சைக்கிள் மீது சரக்கு லாரி மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பலி.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள கடமடை கிராமத்தை சேர்ந்த முதியவர்  முத்துசாமி (வயது. 65) விவசாயி, இவர் நேற்று  விடியற்காலை  கடமடை மெயின் ரோட்டில் உள்ள டீ கடையில் டீ குடிப்பதற்காக சைக்கிளில் சென்றார். கடமடை நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது பாலக்கோட்டில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற சரக்கு லாரி முதியவர் மீது மோதியது.


இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு முத்துசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த பாலக்கோடு போலீசார் உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து  வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad