பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 18 நவம்பர், 2024

பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஒன்றிய தலைவர் சுப்ரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.


ஆர்ப்பாட்டத்திற்க்கு ஓன்றிய செயலாளர் ராஜன், மாவட்ட பொருளாளர்  ஜானகிராமன், ஒன்றிய துணைத் தலைவர் ராஜா, மாவட்ட துணைத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வருவாய் கிராம ஊழியருக்கு இணையாக மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் 6750 ரூபாயும், அகவிலைப்படி,  குடும்ப ஓய்வூதியம், சத்துணவு ஓய்வூதியர்களுக்கு ஈமச்சடங்கு நிதியாக 25 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக  கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றி வரும் தமிழக அரசை கண்டித்தும், உடனடியாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad