பாலக்கோட்டில் ஶ்ரீ பால்வண்ணநாதர் கோவிலில் அன்னாபிஷேகம்- திராளன பக்தர்கள் சாமி தரிசனம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 16 நவம்பர், 2024

பாலக்கோட்டில் ஶ்ரீ பால்வண்ணநாதர் கோவிலில் அன்னாபிஷேகம்- திராளன பக்தர்கள் சாமி தரிசனம்.


தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பிரசித்தி பெற்ற ஶ்ரீ பால்வண்ணநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத முழுநிலவு நாளில் பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்வது வழக்கம். அதில் தூய நீர், பசும்பால், இளநீர், கருப்பஞ்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள், அன்னம் உள்ளிட்டவைகளும் இவற்றுள் மிகச் சிறப்பானது அன்னாபிஷேகம் செய்வது. இதில் உயிர்களுக்கு உணவும் நீரும் குறைவின்றி கிடைக்க அருள் செய்த ஈசனுக்கு நன்றி சொல்லும் வகையிலும், நாட்டிலும் வீட்டிலும் எக்காலத்திலும் உணவுப் பஞ்சம் வராமல் இருக்கவும் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்கின்றனர்.

நிலத்தில் விழும் நெல், பெய்யும் மழை நீரின் உதவியால் வளர்ந்து, காற்றினால் கதிர்பிடித்து, சூரியனின் வெப்பத்தீயினால் பால் இறுகி விளைச்சலைத் தருகிறது. காற்றின் உதவியுடன் கதிரடித்து எடுக்கப்படும் நெல், உமி நீக்கப்பட்டு அரிசியான பிறகு, மண்ணால் ஆன பானையில் நீரில் இடப்பட்டு, காற்றின் துணையால் எரியும் நெருப்பில் வெந்து, அன்னமாகி ஆகாயத்தின் கீழ் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவாகிறது. அந்த அன்னத்தினால் செய்யப்படுவதால்தான், அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது.


சிவலிங்கத் திருமேனியின் மேலிருந்து அன்னத்தை வைத்துக் கொண்டு மூன்று பகுதிகளாக பிரித்து கீழ்ப்பகுதி, பிரம்ம பாகம், நடுப்பகுதி விஷ்ணு பாகம்,  மேற்பகுதி பாணம்,  அன்னாபிஷேகம் சிவலிங்கத் திருமேனியின் எல்லா பாகங்களுக்குமாக முழுமையாகவே வைக்கப்படும். அந்தச் சமயத்தில் யஜுர் வேத பாராயணமும், ருத்ரம், சமகம் போன்ற மந்திரங்களின் பாராயணமும் நடைபெறும்.  லிங்கத்தின் ஆவுடையிலும் பாணத்தின் மீதும் சாத்தப்பட்ட அன்னம் மிகவும் கதிர்வீச்சுடன் இருக்கும். 


எனவே அதனை எவரும் உண்ணாமல் அப்படியே எடுத்துச் சென்று கோயில் குளத்திலோ அல்லது ஆற்றிலோ கொண்டு கரைப்பார்கள். நீரில் வாழும் புழு, பூச்சிகள், மீன்கள், மற்ற நீர் வாழ் உயிரினங்கள் எல்லாமும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டு நீரில் கரைக்கப்படுவதாகவும் இதில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad