இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி.ஆ ஆப, அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், தருமபுரி மாவட்டம், பென்னாகரம், அலகட்டு கிராமத்தில் அலகட்டு கிராமத்தில் விஷப்பாம்பு கடித்து உயிரிழந்த கஸ்தூரி என்ற சிறுமியின் பெற்றோருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி. ரூ.3.00 இலட்சம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி உள்வட்டம், வட்டுவனஅள்ளி வருவாய் கிராமத்திற்குட்பட்ட அலகட்டு மலை கிராமத்தைச் சேர்ந்த திரு.ருத்ரப்பா - திருமதி.சிவலிங்கி தம்பதியரின் மகள் கஸ்தூரி (வயது 14) என்பவர் 28.11.2024 அன்று அவர்களுக்குச் சொந்தமான நிலத்தில்: கீரை பறித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விஷப்பாம்பு கடித்ததில், உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன் என தெரிவித்து, மேலும், விஷப்பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆஃப.. அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், தருமபுரி மாவட்டம், பென்னாகரம், அலகட்டு கிராமத்தில் அலகட்டு கிராமத்தில் விஷப்பாம்பு கடித்து உயிரிழந்த கஸ்தூரி என்ற சிறுமியின் பெற்றோருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி ரூ.3.00 இலட்சம் இன்று (29.11.2024) வழங்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வட்டுவன அள்ளி ஊராட்சியில் வனப்பகுதியில் அமைந்துள்ள ஏரிமலை மற்றும் அலகட்டு குக்கிராமங்களுக்கு செல்லும சீங்காடு முதல் அலகட்டு வழி ஏரிமலை சாலை 9.00 கி.மீ நீளம் வனப்பகுதிக்கு சொந்தமான சாலையாகும். இச்சாலை அமைக்க வனத்துறையிடமிருந்து அனுமதி வேண்டி பர்வேஸ் இணையத்தளத்தில் (Parvesh Portal) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இச்சாலையை இந்திய அரசின் பிராந்திய அதிகாரி கடந்த 18.07.2024 அன்று பார்வையிட்டுள்ளார். ஆய்வறிக்கையின்படி சீங்காடு முதல் ஏரிமலை செல்லும். 4.50 கி.மீ நீளம் செல்லும் சாலைக்கு 7.50 B அகலத்திற்கு சாலை அமைக்க அனுமதி தருவதாகவும், அலகட்டு குக்கிராமத்தில் 100-க்கும் குறைந்த மக்கள் தொகை இருப்பதால் மீதமுள்ள ஏரிமலை முதல் அலக்கட்டு வரை செல்லும். சாலைக்கு 3.00 மீ அகத்திற்கு மட்டுமே சாலை அமைக்க தர இயலும் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் 3.00 மீட்டர் அகலத்திற்கு பேருந்து மற்றும் சரக்கு வாகனங்கள் செல்லும் சாலை அமைக்க இயலாது (All weather Road). எனவே 7.50 மீ அகலத்திற்கு சாலை அமைக்க வேண்டி மறு முன்மொழிவு பர்வேஸ்: இணையத்தளத்தில் (Parvesh Portal) பதிவேற்றம் செய்யப்பட்டு. தொடர் நடவடிக்கையில் உள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக