மை தருமபுரி அமைப்பின் மனிதநேயமிக்க சேவைகளை பாராட்டிய தருமபுரி மாவட்ட போட்டோகிராபர்கள் நலச்சங்கம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 24 நவம்பர், 2024

மை தருமபுரி அமைப்பின் மனிதநேயமிக்க சேவைகளை பாராட்டிய தருமபுரி மாவட்ட போட்டோகிராபர்கள் நலச்சங்கம்.


தருமபுரி மாவட்டத்தில் அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் மனிதநேயமிக்க சேவைகளை மனிதாபிமானத்துடன் செய்து வருகின்றனர் மை தருமபுரி அமைப்பினர். இந்த அமைப்பின் மூலம் ஆதரவற்று இறந்தவர்களின் புனித உடல்கள் நல்லடக்கம், தினந்தோறும் பசித்தோருக்கு உணவு சேவை, அவசர இரத்த தான சேவை, மாற்றுத்திறனாளிக்கு உதவுதல் போன்ற சேவைகளை தினந்தோறும் செய்து வருகின்றனர். 


தருமபுரியில் நடைபெற்ற தருமபுரி மாவட்ட போட்டோகிராபர் மற்றும் வீடியோகிராபர் நலச்சங்க பொதுக்குழு கூட்டத்தில் மை தருமபுரி அமைப்பின் சேவைகளை பாராட்டினர். இது போன்ற பாராட்டுக்கள் எங்கள் சேவையை மென்மேலும் உயரவும், பல மக்களுக்கு உதவும் உறுதுணையாகவும், ஊக்குவித்தலாகவும் இருக்கும். என்றென்றும் மனிதநேயமிக்க சேவையில் மை தருமபுரி அமைப்பினர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad