பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு 2024-2025-ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருது 08.03.2025 உலக மகளிர் தினவிழாவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட உள்ளது. இவ்விருதுக்கு ரொக்கப்பரிசு, தங்கப்பதக்கம், சான்று மற்றும் சால்வை வழங்கப்படும். மேற்படி விருதுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
2025-ஆம் ஆண்டு அவ்வையார் விருது வழங்கும் பொருட்டு கருத்துருக்கள் அனுப்புவதற்கான விதிமுறைகள்:
- தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
- சமூகநலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.
- இவ்விருது குறித்த விவரங்கள் அனைத்தும் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://award.tn.gov.in) 18.11.2024 முதல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்.31.12.2024 இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
- இணையதளத்தில் பதிவு செய்த பிறகு, அனைத்து ஆவணங்களையும், மாவட்ட சமூகநல அலுவலகம், கூடுதல் கட்டிடம், மாவட்ட ஆட்சியர் வளாகம், தருமபுரி மாவட்டம் என்ற முகவரிக்கு கையேடாக (Booklet) தயார் செய்து தமிழ் (ம) ஆங்கிலத்தில் அச்சு செய்யப்பட்டு தலா 2 நகல்கள் அனுப்பிட வேண்டும்.
என மாவட்ட ஆட்சிதலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக