எலங்காலப்பட்டி கிராமத்தில் தாய் சேய் நலன் விழிப்புணர்வு நிகழ்ச்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 20 நவம்பர், 2024

எலங்காலப்பட்டி கிராமத்தில் தாய் சேய் நலன் விழிப்புணர்வு நிகழ்ச்சி.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த எலங்காலப்பட்டி கிராமத்தில் பேகார அள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தாய் சேய் நலன் விழிப்புணர்வு நிகழ்ச்சி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையில்  நடைப்பெற்றது.


நிகழ்ச்சியில், தாய் சேய் நலம், வளர்இளம் பெண்கள் கர்ப்பம் தடுத்தல் மற்றும் பாலின விகிதம் மேம்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் . ஜெயந்தி கலந்துகொண்டு  மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில்  மருத்துவ அலுவலர்கள், மாவட்ட சமூகநல அலுவலர்,சுகாதார அலுவலர்கள்,ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad