தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு வருவாய் துறையை கண்டித்து மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத் தலைவர் பி.கே.சிவா தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்க்கு பாஜக நகர தலைவர் கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதேவி, மேற்கு ஒன்றிய செயலாளர் சேட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது மாவட்ட வருவாய் அலுவலரின் தவறான உத்தரவை கண்டித்தும், சீராய்வு மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், கிராம நிர்வாக அலுவலரின் ஏதேச்சதிகாரம் போக்கை கண்டித்தும், நிலத்தை அளவீடு செய்யாமல் காலம் தாழ்த்தும் சர்வேயர்களின் மெத்தன போக்கை கண்டித்தும் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு ஒன்றிய பொது செயலாளர் பெரியண்னன், நகர செயலாளர் ராஜா, நகர பொருளாளர் முனியப்பன் மற்றும் பாஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக