பாலக்கோடு தக்காளிமண்டியில் விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் பயன் பெறும் வகையில் நிழற்கூடம் அமைத்தல், ஆடு அடிக்கும் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததை அடுத்து கடந்த வாரம் அரூரில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு திட்ட பணிகளை கானொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து, நேற்று பாலக்கோடு தக்காளிமண்டியில் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவைத் தலைவர் அமானுல்லா, பேரூராட்சி கவுன்சிலர்கள் மோகன், ஜெயந்திமோகன், ரூஹித், சரவணன், கிளை செயலாளர் முருகேசன், நிர்வாகிகள் சக்திவேல், பனங்காடுகுமரன், மன்சூர், மாதப்பன், பார்த்தீபன், குத்தகைதாரர் சின்னசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக