தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திரா மற்றும் APJ - ன் அக்னி சிறகுகள் இளைஞர் நற்பணி சங்கம் இணைந்து நல்லம்பள்ளி ஒன்றியம் C. புதூர் கிராமத்தில் பகவான் பிர்சா முண்டா அவர்களின் பிறந்த நாள் விழா (கௌரவ் திவாஸ்) நிகழ்ச்சியானது கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நேரு யுவ கேந்திராவின் பல்நோக்கு பணியாளர் திரு. ரா. முனியப்பன் வரவேற்புரை வழங்கினார். கோனாங்கிஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி அலமேலு பாண்டுரங்கன் தலைமை வகித்தார்.
திருமதி. அமுதா. தலைமை ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி C. புதூர் அவர்கள் பகவான் பிர்சா முண்டா அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய விரிவான கருத்துக்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பென்னாகரம் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜசுந்தர், காவல் உதவி ஆய்வாளர் திரு. மூர்த்தி மற்றும் காவல் துறையை சேர்ந்த திரு. ராஜாங்கம், திரு சின்னசாமி ஆகியோர் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பகவான் பிர்சா முண்டா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி சிறப்பு அழைப்பாளர்கள் மரியாதை செலுத்தினார்கள். பிறகு சிறப்பு அழைப்பாளர்கள் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டது. அடுத்ததாக தூய்மைப்பணி மேற்க்கொள்ளப்பட்டது. பகவான் பிர்சா முண்டா அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, வினாடி வினா போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு அழைப்பார்கள் மூலம் நேரு யுவ கேந்திராவின் சார்பில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் 60 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் APJ- ன் அக்னி சிறகுகள் இளைஞர் நற்பணி சங்கத்தின் தலைவர் திரு. நாகராஜ், செயலாளர் திரு. சேதுபதி, பொருளாலர் திரு. திருமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடுகளை செய்திருந்தனர். இறுதியாக நேரு யுவ கேந்திராவின் தேசிய இளைஞர் தொண்டர்கள் திரு. வெற்றிவேல், திரு. ஆனந்தராஜ் அவர்கள் நன்றி கூறினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக