பேளாரஅள்ளி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு வேலை கேட்டு மாற்று திறனாளிகள் முற்றுகை போராட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 13 நவம்பர், 2024

பேளாரஅள்ளி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு வேலை கேட்டு மாற்று திறனாளிகள் முற்றுகை போராட்டம்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம், பேளாரஅள்ளி ஊராட்சி அலுவலகம் முன்பு வேலை கேட்டு மாற்று திறனாளிகள் முற்றுகை போராட்ட்த்தில் ஈடுபட்டனர்.


இந்த ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளுக்கு மாற்று திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்குவதில்லை என கோரி  100க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். அப்போது வேலை கொடு, வேலை கொடு மாற்று திறனாளிகளுக்கு வேலை கொடு, மாற்று, மாற்று பணித்தள பொறுப்பாளரை உடனே மாற்று, கைவிடு கைவிடுமாற்று திறனாளிகளை ஒருமையில் பேசுவதை கைவிடு உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகா, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் ஆகியோர் மாற்று திறனாளிகளின் கோரிக்கை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து, அதனை ஏற்று மாற்றுதிறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad