119வது ஆதரவற்ற உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி தன்னார்வலர்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 27 நவம்பர், 2024

119வது ஆதரவற்ற உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி தன்னார்வலர்கள்.


தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் உயிரிழந்தார். இவரது பிரேதத்தை மீட்ட போலீசார் தொடர்ந்து விசாரித்ததில் இவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து உடலை மை தருமபுரி தன்னார்வலர்கள் நல்லடக்கம் செய்தனர். 


இதில் காரிமங்கலம் காவல் நிலைய தலைமை காவலர் ரமேஷ் குமார், மை தருமபுரி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் முஹம்மத் ஜாபர் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமைப்பின் சார்பாக இதுவரை 119 ஆதரவற்றும், ஏழ்மையிலும் இறந்தவர்களின் புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad