இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பெரும்பாலும் கிராமப்புறங்களை சார்ந்த பகுதி என்பதால் பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இங்கு நேரம் காப்பாளர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் புறநகர் கிளை சார்பில் செயல்பட்டு வருகிறது.இந்த அலுவலகத்தில் ரமேஷ் என்பர் பணிபுரிந்து வருகிறார்.
இந்த அலுவலகத்தில் பெரும்பாலும் அவர் பணிக்கு வருவதில்லை அப்படியே வந்தாலும் அறையை திறந்து வைத்துவிட்டு சென்று விடுகிறார் என்பதே இப்பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. இந்தப் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் பேருந்து நேரத்தை அறிந்து கொள்ள மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் இங்கு வேறொரு நபரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்பதே இங்குள்ள பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
1 கருத்து:
பயணியின் செயல் அவலம் இல்லை. பணியாளரின் செயலே அலட்சியம்!
கருத்துரையிடுக