அதே சமயம் வெள்ளிசந்தையில் இருந்து பாலக்கோடு நோக்கி பயணிகள் ஆட்டோ வந்து கொண்டிருந்தது. பாலக்கோடு அடுத்த திம்மம்பட்டி அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது பயணிகள் ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதியது இதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்க்குள்ளானது.
இந்த விபத்தில் தர்மபுரியை சேர்ந்த லட்சுமி (வயது.46) வெள்ளிசந்தையை சேர்ந்த முருகம்மாள் (வயது.20), வேததமிழரசி (வயது.12) சீரியம்பட்டியை சேர்ந்த சின்னவன் (வயது.61) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதில் லட்சுமி தவிர மற்ற மூவரையும் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக