பாலக்கோட்டில் நின்று கொண்டிருந்த காரின் கதவை திடிரென திறந்தால்,காரின் கதவில் மோதி இரு சக்கர வாகன ஓட்டி படுகாயம் - சி.சி.டி.வி காட்சி வைரல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 7 நவம்பர், 2024

பாலக்கோட்டில் நின்று கொண்டிருந்த காரின் கதவை திடிரென திறந்தால்,காரின் கதவில் மோதி இரு சக்கர வாகன ஓட்டி படுகாயம் - சி.சி.டி.வி காட்சி வைரல்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, கனம்பள்ளி தெருவை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் நாகராஜ் (41), இவர் நேற்று மதியம் 1 மணி அளவில் புறவழிசாலையில் இருந்து பாலக்கோடு  பேருந்து நிலையம் நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது எம்.ஜி.ரோடு தனியார் டிபார்ட்மென்ட் ஸ்டோர் அருகே வந்து கொண்டிருந்த போது டிபார்ட்மென்ட் ஸ்டோர் முன்பு நின்றிருந்த சொகுசு காரின் உள்ளே இருந்தவர் திடிரென காரின் கதவை திறந்ததால், கார் கதவில் இருசக்கர வாகனம் மோதி விபத்திற்க்குள்ளானது.


இதில் நாகராஜ் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


இதுகுறித்து பாலக்கோடு காவல்துறையினர் விசாரித்ததில் டிபார்ட்மென்ட் ஸ்டோர் உரிமையாளர் சரவணன் என்பவரின்  மனைவி ராஜேஸ்வரி நின்றிருந்த காரின் உள்ளே இருந்தவர் வெளியே வர காரின் கதவை திறந்த போது எதிர்பாரத விதமாக விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.இந்த விபத்து குறித்து  பாலக்கோடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.விபத்து குறித்த சி.சி.டி.வி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad