தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் தமிழகம் முழுவதும் சாதி சான்றிதழ் பெற தமிழ்நாடு அரசு மற்றும் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அடிப்படையில் நடைமுறைகளை பின்பற்றி சான்றிதழ் வழங்க வேண்டும் அகில பாரதிய ஆதிவாசி விகாஸ் பரிஷத் தமிழ்நாடு அமைப்பின் மாநில தலைவர் முத்து அறிக்கை.
- ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு புலம் பெயர்ந்த SC/ST மக்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்குதல்-மாண்புமை சென்னை உயர்நீதிமன்ற வழக்கு எண்:137 41/2023 மற்றும் W.MP.NO.13425/2023 - நடைமுறைகளை பின்பற்ற வருவாய் கோட்டாட்சியர்களுக்கு உத்தரவிட கோருதல் தொடர்பாக.
- மான்புமை சென்னை உயர்நீதிமன்ற வழக்கு எண்: 13741/2023 மற்றும் W.M.PNO.13425/2023
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தலைமைச் செயலகம் அரசு செயலாளர் அவர்களின் கடித எண்: 6008713/CV-1/2023-1 ன் நகல், மேலும் பழங்குடியின மக்கள் சாதிச்சான்றிதழ் பெறுவதில் இன்னும் பலவகையான சிக்கல்கள் நீடித்து வருகிறது. அதாவது ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு புலம் பெயர்ந்த பின்னர் சாதிச்சான்றிதழ் பெறுவதில் சிக்கல் இருக்கிறது. இதனை கலைய அரசு பார்வையில் கண்டுள்ள கடிதங்களின் நடைமுறையை பின்பற்ற வலியுறுத்தி உள்ளது.
எனவே மேற்கண்ட அரசு கடிதம் மற்றும் மான்புமை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள உத்தரவுப்படி சாதி சான்றிதழ் வழங்கினால் அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் அனைவரும் பயன் பெறுவார்கள். எனவே இந்த கோரிக்கையை உடனடியாக நடைமுறை படுத்த அனைத்து மாவட்ட ஆட்சிரியர்களும் முன்வர வேண்டும் என்று அகில பாரதிய ஆதிவாசி விகாஸ் பரிஷத் தமிழ்நாடு அமைப்பு கோரிக்கை வைக்கிறது.. இதனை உடனடியாக அமல்படுத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக